கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களுக்கு தலைவாழை இலையில் விருந்து அளித்த இஸ்லாமியர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் கிராமத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டில் சோழ கேரளீஸ்வரம் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற முதலாம் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட செளந்தரநாயகி அம்பிக்கா சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த அக்கிரம மக்கள் முடிவு செய்தனர்.

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் கிராமத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டில் சோழ கேரளீஸ்வரம் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற முதலாம் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட  செளந்தரநாயகி அம்பிக்கா சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த அக்கிரம மக்கள் முடிவு செய்தனர். 



தமிழக அரசின் உதவி மற்றும் கிராம மக்களின் பங்களிப்புடன் நிதிதிரட்டி சமீபத்தில் அக்கோவில் புனரமைக்கப்பட்டது. பூச்சு வேலைப்பாடுகள், உட்கட்டமைப்பு பணிகள் என அனைத்தும் முடிந்து இன்று காலை கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

கும்பாபிஷேகம் தொடர்பான பேச்சு வார்த்தையின் போதே, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்க வேண்டும் பரம்பூர் கிராம இஸ்லாமிய மக்கள் முடிவு செய்து வைத்திருந்தனர்.



அதன்படி, விரதமிருந்து இன்று காலை கோவிலுக்கு கும்பாபிஷேகம் பார்க்க வந்த பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து, அமர வைத்தனர் அம்மக்கள். தொடர்ந்து, வந்த அனைவருக்கும் அப்பளம், பாயசத்துடன் மணக்க மணக்க சைவ விருந்து அளிக்கப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய முகமது ஃபாரூக் என்பவர், "மத நல்லிணக்கம் என்பது நம் தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளம். அதை வலியுறுத்தும் விதமாகவே இந்த அன்னதானம் நிகழ்ச்சியை நடத்துகிறோம். கிட்டத்தட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டுள்ளார்கள். எங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது பெரும் மகிழ்வைத் தருகிறது'' என்றார். 

இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். 

மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாகச் செயல்பட்ட பரம்பூர் கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது.

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...