108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் 5 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் ஐந்து பேருக்கு திடீர் வாந்தி மற்றும் மயக்கமடைந்தனர். இதனால், அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை : பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் ஐந்து பேருக்கு திடீர் வாந்தி மற்றும் மயக்கமடைந்தனர்.  இதனால், அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.



கோவையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கான இரண்டு நாள் நினைவூட்டல் பயிற்சி நேற்று தாமஸ் கிளப் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்துள்ளது. இதனை அறியாமல் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மருத்துவ உதவியாளர்கள் அருணா, சசிகலா, நித்யா, ராணி திருமாத்தாள், கவிதா ஆகியோருக்கு வாந்தி ஏற்பட்டு, மயக்கமடைந்தனர். இந்த உணவை உண்ட ஐவரில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். 

இந்த நிலையில், மயக்கமடைந்த அனைவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் முத்துராஜா பேசுகையில், "வருடத்திற்கு இருமுறை இரண்டு நாட்கள் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நேற்று தொடங்கி இன்றுடன் முடிகிறது. அரசு புத்தாக்கப் பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ. 150 என உணவுக்காக கொடுத்தாலும், இங்குத் தரக்குறைவான உணவு தான் வழங்கப்படுகிறது. உணவு விஷயத்தில் தொடர்ந்து நிர்வாகம் சீர்கேட்டோடு நடந்து வருகிறது. மதிய உணவில் வழங்கப்பட்ட சாப்பாட்டில் பல்லி கிடந்ததால், கர்ப்பிணிப் பெண் உள்பட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என்றார்.

மேலும், நிர்வாகத்திடம் இது குறித்து தெரியப்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்வாக தரப்பில் உறுதி அளித்துள்ளதாகவும், இதேபோன்று, முன்பு ஒருமுறை நடந்த போதும், நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களின் உயிரோடு விளையாடும் நிர்வாகத்தைக் கண்டிக்குமா தமிழக அரசு என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...