தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை : தமிழக சுகாதாரத்துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ல் தமிழகம், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இடம் தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி விட்டன. தமிழகத்தில் மருத்துவமனை அமைக்க மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கடந்த 2015 ஏப்ரல் மாதத்தில், மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிந்து பல மாதங்களாகியும் எந்த பதிலும் முடிவும் எடுக்கவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவது குறித்து உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் அலுவலகம், தமிழக சுகாதாரத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை துரிதபடுத்த வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த பரிந்துரை கடிதத்தின் நகல், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்த ரமேசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...