தனிநபர் கழிப்பிடங்கள் கட்டித் தருவதாகக் கூறி மோசடி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தனிநபர் கழிப்பிடங்களைக் கட்டித் தருவதாகக் கூறி 42 பயனாளிகளின் அரசு மானியத்தை சுருட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை: தனிநபர் கழிப்பிடங்களைக் கட்டித் தருவதாகக் கூறி 42 பயனாளிகளின் அரசு மானியத்தை சுருட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே உள்ளது ஆலமரமேடு என்ற மலைக்கிராமம். பழங்குடியின மக்கள் வசித்து வரும் இக்கிராமத்தில், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 42 பயனாளிகளுக்கு கழிப்பிடம் கட்டுவதற்கான மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ள தங்களது பகுதியில், வீட்டிற்கு வீடு கழிப்பறை கட்டாய தேவை என்பதை உணர்ந்து கழிப்பிட கட்ட இக்கிராம மக்கள் ஆயத்தமாகினர்.

இந்தப் பணிகளை மேற்கொள்ளப் பயனாளிகள் வங்கி கணக்கில் முதல் தவணையாக 2 ஆயிரத்து 30 ரூபாயும், இரண்டாவது தவணையில் 9 ஆயிரத்து 970 ரூபாயும் என மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. அதன்படி, கழிப்பிடம் கட்டுவதற்கான செப்டிக் டேங்க் குழி மற்றும் கழிப்பறைக்கான பேஸ்மட்ட பணிகளை மக்கள் தங்களது சொந்த செலவில் செய்த நிலையில், கழிப்பிடம் கட்டுவதற்கான பணிகளைப் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஈஸ்வரன் மேற்கொண்டார். இரண்டு தவணை பணம் வந்ததும், ஒப்பந்ததாரர் பயனாளிகளின் கையெழுத்தைப் பெற்று, ஒவ்வொருவர் வங்கி கணக்கில் இருந்தும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டார்.

ஆனால், பணம் எடுத்து 6 மாதங்கள் கடந்த நிலையில், கட்டி முடிக்கப்பட்டு இருப்பது ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே. அதுவும் ஏற்கனவே இருந்த கழிப்பறையை சீரமைத்து மட்டுமே கொடுத்து இருப்பதாகவும், 10 கழிப்பிடங்கள் கட்டுமான பணிகள் பாதியில் நிற்பதாகவும் அக்கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும், 35 வீடுகளில் கழிப்பிடம் கட்டுவதற்கான எந்தப் பணியும் நடைபெறவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.



''அரைகுறையாக எழுப்பப்பட்டு பாதி வேலை மட்டுமே முடிந்த நிலையில், காட்சிப் பொருளாக கழிப்பிடங்கள் இருக்கிறது. பணிகள் எதுவும் முடிவடையாத நிலையில் பணத்தை மட்டும் ஒப்பந்ததாரர் எடுத்து கொண்டனர். அதன் பின்னர் ஒப்பந்ததாரர் பணிகளை செய்ய இப்பகுதிக்கு திரும்ப வரவில்லை. உடல் பருமனாக உள்ள தன்னை போன்றவர்கள், இந்தக் கழிப்பறைக்குள் சென்று வரக்கூட முடியாத அளவிற்கு குறுகலாக தான் கட்டப்படுகிறது. தரமற்ற முறையில் கட்டப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பாதுகாப்பு அற்றதாக இருக்கிறது.” இவ்வாறு கூறுகிறார் அக்கிராமத்தைச் சேர்ந்த மணி.

இக்கிராமத்தில் கழிப்பிடங்கள் கட்டுவதில் இலட்சக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறும் அக்கிராம இளைஞர்கள், பயனற்ற வகையில் கட்டப்படுவதற்கு பதிலாக அரசு வழங்கிய பணத்தை திரும்பக் கொடுத்தால் கூட தாங்களே கழிப்பிடங்களை கட்டி கொள்ள தயார் என தெரிவிக்கின்றனர். மேலும், கழிப்பறை கட்டுமான பணிகள் மக்களுக்குப் பயன்படும் வகையில் கட்ட வேண்டுமென்பதும், அப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டுமென்பதும் ஆலமரமேடு பழங்குடியின மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...