தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : கோவையில் தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

கோவை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தில் புதியதாக தற்காலிகமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர்  பதவிக்கு 01.07.2017 அன்றைய நிலையில் 35 வயதிற்கு மிகாமலும், ஏதாவது ஒரு பட்டம் மற்றும் கணிப்பொறியில் சான்று (பட்டயப்படிப்பு) பெற்றிருப்பவரும் அரசு நியமனத்தில் பின்பற்றப்படும் இனசுழற்சி முறையைப் பின்பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையிலிருந்து வழங்கப்படும் கேள்வித்தாள் வைத்துத் தேர்வு நடத்தி நேர்காணல் வைத்துத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்குத் தொகுப்பு ஊதியமாக ரூ.15000 மட்டும் வழங்கப்படும். இதரபடிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.  மேற்கண்ட தகுதிகளை உடைய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 22.02.2018 மாலை 05.45மணி வரை “புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய கட்டிடம், முதல் தளம், கோயம்புத்தூர். 641018” (தொலைபேசி எண் 0422-2309685) என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டப்படுகிறது.

தேர்வு நடைபெறும் விவரம் தகுதியுள்ள நபர்களுக்கு தனித்தனியாக அழைப்புகடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...