குரூப்-4 தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4-க்கான தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4-க்கான தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

 



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பேசுகையில், அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. அதன்படி, வரும் ஞாயிறு (பிப்.,11) அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நடைபெறுவுள்ளது. இத்தேர்வில், கோவை மாவட்டத்தில் மட்டும் உள்ள 153 மையங்களில் 71,849 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வினை கண்காணிக்க 68 மொபைல் யூனிட்களும், 20 பறக்கும் படை குழுவும், 245 அறை கண்காணிப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகள் ஏதும் எற்படாத வகையில் தேர்வினை முழுமையாகக் கண்காணிக்க ஒளிப்பதிவு செய்யப்பட உள்ளது. 

மேலும், தேர்வாளர்கள் சிரமமின்றி தேர்வெழுதப் பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி, தளவாடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடந்த முறை போலவே எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வகையில் தேர்வினை நடத்தும்படி, கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்  கூறினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...