மாநகருக்கு வெளியே தலைதூக்கியுள்ள பேனர் கலாச்சாரம் : கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்...?

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர் கலாச்சாரங்கள் கட்டுக்குள் வந்தாலும், மாநகருக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர் கலாச்சாரங்கள் கட்டுக்குள் வந்தாலும், மாநகருக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை சந்திப்புகளில் விளம்பரப் பலகைகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன. இவற்றை நகரமைப்பு பிரிவினர் அகற்றினாலும், அனுமதியின்றி மீண்டும் மீண்டும் வைக்கப்படுகின்றன. அதனால், விளம்பர பலகைகளுக்கான இரும்பு ஆங்கிள்களையும் வெட்டி அகற்ற மாநகராட்சி தனி அலுவலர்  உத்தரவிட்டார். இதையடுத்து, மண்டலம் வாரியாக அனைத்து பகுதிகளிலும், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வந்தன.

அவினாசி சாலையில் ஆர்.ஜி. புதுார், ஹோப்ஸ், சித்ரா சந்திப்பு, விமான நிலைய சாலை, தடாகம் சாலை - இடையர்பாளையம் சிக்னல், பி.என். புதுார், அவினாசி ரோடு மேம்பாலம், காந்திபுரம், போத்தனுார் - நஞ்சுண்டாபுரம் சாலை உள்ளிட்ட 50 இடங்களில் இருந்த பிளக்ஸ் போர்டுகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. இரும்பு ஆங்கிள்கள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டன.



கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் முதல் நேற்று வரை 6,184 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளதாம். இது தொடர்பாக, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, விபத்துக்கும் வழிவகுக்கின்றன. அவற்றை அகற்றுவதோடு, மீண்டும் வைக்காமல் இருக்க இரும்பு ஆங்கிள்களையும் அகற்றி வருகிறோம். இந்நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார். 

இவ்வளவு விளம்பரப் பலகைகளை அகற்றியுள்ளதாக நகரமைப்புப் பிரிவினர் கூறினாலும், மாநகராட்சி எல்லைக்குள் அவினாசி சாலை, திருச்சி சாலை, ஆத்துப்பாலம், பாலக்காடு சாலை, சத்தி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், தனியார் இடங்கள் மற்றும் கட்டடங்களின் மீது பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் இன்னும் இருப்பது கண் கூடாகத் தெரிகிறது. மாநகராட்சி எல்லைக்கு வெளியிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. அனைத்தையும் அகற்ற வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தினுடையது.

Newsletter

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...