பத்திரிக்கையாளர்கள் சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு பாராட்டு விழா

பத்திரிக்கையாளர்கள் 140 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க முயற்சி மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் பாராட்டுவிழா நடத்தினர்.

கோவை: பத்திரிக்கையாளர்கள் 140 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க முயற்சி மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் பாராட்டுவிழா நடத்தினர்.

பத்திரிக்கையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கடந்த டிசம்பர் மாதம் கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 140 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து, பத்திரிக்கையாளர்கள் சார்பில், தமிழக அரசு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆகியோருக்குப் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இந்த பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுக்குட்டி, அம்மன் அர்ஜுனன், மாநிலங்களவை எம்.பி. ஏ.கே.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி துரை.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி. ஆறுக்குட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட இடத்தில், தனது சொந்த தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆழ்துறை கிணறு அமைத்துத் தரப்படும்.” என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ் பேசுகையில், " ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையில் விமர்சனங்கள் எழுதும் போது அதன் உண்மைத் தன்மை ஆராய்ந்து செய்திகள் வெளிட வேண்டும்" என்றார். 

ஊரக மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "பத்திரிக்கையாளர்கள் தான் எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள். கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற பல தடைகள் இருந்தது. தடைகளைத் தாண்டி அதனை செய்து தர வேண்டியது அரசுடைய மற்றும் என்னுடைய கடமையாக இருந்தது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தடைகளை தாண்டி இதற்கான ஆணைகள் வழங்கபட்டது. அரசு நிர்ணயித்த விலை கூடுதலாக உள்ளது அதனை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து இலவச வீட்டு மனை பட்டாவாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.



கோவை மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பத்திரிக்கையாளர்களுக்கும் இது முன்னுதாரணமாக இருக்கும். விடுபட்டுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கிடைத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்கப்படும். அங்கு வீடுகள் கட்டுவதற்கு மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெற்று தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என்று பேசினார். 

நிறைவு விழாவில் அமைச்சருக்கு கோவை மாவட்ட அனைத்துப் பத்திரிக்கையாளர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...