கோவையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: தடயங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

கோவையில் உள்ள ஏ.டி.எம். மைத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த மர்ம நபர் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் உள்ள ஏ.டி.எம். மைத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த மர்ம நபர் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுக்கிரவார்பேட்டை பசுவண்ணன் கோவில் அருகே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் பணம் எடுப்பது போல ஏ.டி.எம் மையத்திற்குள் முகத்தை மறைத்தபடி சென்றுள்ளார்.

பேக்கிற்குள் மறைத்து வைத்திருந்த கம்பியால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்த சப்தம் கேட்டு எதிர் வீட்டில் இருந்தவர் விளக்கு போட்டு பார்க்கும்போது கொள்ளையடிக்க வந்த நபர் தப்பிவிட்டார்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் பதிவாகியுள்ள கை ரேகைகள் மற்றும் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

கோவையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் காளப்பட்டி சாலை மற்றும் அவினாசி சாலையில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் கொள்ளை நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக வட மாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஏ.டி.எம் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...