வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் ஒருவர் பலி: பொதுமக்கள் அச்சம்

வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் மன நிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியானார்.

கோவை: வால்பாறை பகுதியில் கரடி தாக்கியதில் மன நிலை பாதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியானார். 

வாட்டர்பால் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் சூசை. மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தனது சகோதரர் இருதயராஜூடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் சூசை மாயமானார். இருதயராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது நேற்று இரவு 9.30 மணிக்கு வாட்டர்பால் எஸ்டேட் ஆண்டிவீரன் வனப்பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.



இது தொடர்பாக வால்பாறை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனச்சரகர் சக்திவேல், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி, காவல்துறை ஆய்வாளர் திருமேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நள்ளிரவு 1 மணிக்கு உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.



அப்போது, சூசை கரடி தாக்கி இறந்தது தெரியவந்தது. உயிரிழந்த சூசை தனது தாயாரின் கல்லறைக்கு சென்றபோது இச்சம்பவம் நடந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். சூசையின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கரடி தாக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது. 

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...