6 நாட்களுக்குப் பிறகு இறந்த குட்டி யானைக்கு பிரேத பரிசோதனை நிறைவு

நீலகிரியில் தாய் யானையின் பாசப் போராட்டத்தால், இறந்த குட்டி யானையின் உடலுக்கு 6 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி : நீலகிரியில் தாய் யானையின் பாசப் போராட்டத்தால், இறந்த குட்டி யானையின் உடலுக்கு 6 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 



மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் நேற்று சிங்காரா சரகர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்குச் சென்று பார்த்தனர். அப்போது, தாய் யானை இறந்த குட்டி யானையின் உடலை கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு யாரையும் நெருங்கி விடாமல் பாதுகாப்பாக இருந்தது. எவரையும் யானை நெருங்க விடாததால், இறந்த குட்டியின் சடலத்தை மீட்டு, அப்புறப்படுத்தும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.   

தொடர்ந்து, 6 நாட்களாக தாய் யானையில் பாசப் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில், இறந்த தாய் யானையை விட்டு, தாய் யானை இன்று விலகிச் சென்றது. 6 நாட்களுக்குப் பிறகு மீட்கபட்ட இறந்த குட்டி யானையின் உடலுக்கு, வனசரகர் காந்தன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த குட்டி யானை இயற்கை முறையில் இறந்ததாகக் கால்நடை மருத்துவர் உமேஷ் தெரிவித்தார். 

இறந்து குட்டி யானையை விட்டுப் பிரியாமல் 5 நாட்களாக நீடித்த தாய் யானையின் பாசப் போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்தது. 

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...