குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒற்றைச்சாளர வசதியமைப்புக் குழு நியமனம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பல்துறை உரிமங்களை விரைந்து கிடைத்திட வழிவகை செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒற்றைச்சாளர வசதியமைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோவை : குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பல்துறை உரிமங்களை விரைந்து கிடைத்திட வழிவகை செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒற்றைச்சாளர வசதியமைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, நகர் மற்றும் ஊரமைப்புத்துறையால் தொழில் வகைபாடு செய்யப்பட்ட இடங்களில், சொந்தமாகக் கட்டிடம் கட்டி, இயந்திரங்கள் நிறுவி புதிதாக ஆரம்பிக்கும் அல்லது விரிவாக்கம் செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உத்தேச வரைபட ஒப்புதல்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, மின் ஆய்வாளர் அலுவலகம் கொதிகலன் ஆய்வாளர் அலுவலகம், நகர் ஊரமைப்புத்துறை, உள்ளூர் திட்டக் குழுமம் உள்ளாட்சி அமைப்புகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றின் உரிமங்கள் மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றை ஒற்றைச் சாளர முறையில் விரைந்து பெற்றுத்தர மாவட்ட அளவிலான ஒற்றைச்சாளர இடர்நீக்க வசதியமைப்புக்குழு கோவை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இக்குழு மாதத்திற்கு இருமுறை கூடி, மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இந்த அவசரச் சட்டத்தில் உரிமங்கள் பெற குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், தொடர்புடைய துறைகளின் உரிமங்கள்/ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்பட்டு, இக்குழு ஆணைப் பிறப்பிக்கும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிமங்கள்/ஒப்புதல் வழங்காத துறைகள் மீது அதிகபட்சமாக ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், தவறான தகவல்கள் அளித்து உரிமங்கள் பெற விழையும் தொழில் நிறுவனத்திற்கு, முதல் நிகழ்வில் அதிகபட்சமாக ரூ. 15,000 வரையும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக ரூ.25,000 வரையும் அபராதம் விதிக்கப்படும். 

ஆகவே, தொழில்முனைவோர் இக்குழுவின் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு, எளிதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்கி, அவற்றின் வாயிலாக தொழில் வளமும், பொருளாதார ஏற்றமும் பெற்று, வேலைவாய்ப்பைப் பெருக்க முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். 

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...