வனவிலங்குகள் மனித உயிர்கள் மோதல் தடுப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

வால்பாறையை அடுத்த அட்டக்கட்டியில் வனத்துறை பயிற்சி மையத்தில் வனவிலங்குகள் மனித உயிர்கள் மோதல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : வால்பாறையை அடுத்த அட்டக்கட்டியில் வனத்துறை பயிற்சி மையத்தில் வனவிலங்குகள் மனித உயிர்கள் மோதல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



வால்பாறை தனியார் மற்றும் அரசு தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். தேயிலைத் தோட்டங்களின் அருகாமையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும், வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் அளவில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் அன்றாடம் இரை தேடி தேயிலைத் தோட்டங்களுக்கும், தொழிலாளர்கள் குடியிருப்புக்குள்ளும் நுழைவது வழக்கமாக உள்ளது. 

இந்நிலையில், வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு அடிக்கடி ஏற்படுகிறது.  மனித வனவிலங்குகள் மோதல் தடுப்பு குறித்து அட்டக்கட்டியில் வனத்துறை பயிற்சி மையத்தில் கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில், வால்பாறை தேயிலைத் தோட்டப்பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் அடர்ந்த முட்செடிகளும் புதர்களும் உள்ளதால் உயிர்சேதங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் அரசுக்குப் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். இதனால், எஸ்டேட் நிர்வாகங்கள், தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள முட்புதர்களை ஒரு வார காலத்திற்குள் அகற்ற வேண்டும். ரேசன் கடைகளை யானைகள் சேதப்படுத்தாமல் பாதுகாப்பான நிலையில் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எஸ்டேட் பகுதிகளில் திறந்த வெளியில் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் ஆழமான குழிகள் தோண்டி, அதில் கொட்டப்படுவதால் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகளின் ஊடுருவலைத் தடுக்கலாம். என்றார். 

தமிழ்நாடு வனப்பாதுகாவலர் கூறுகையில்:- அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் வனவிலங்குகள் தொழிலாளர்கள் குடியிருப்பு அருகாமையில் நடமாடுவது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தொழிலாளர்களின் குடியிருப்புக்கும், தேயிலைத் தோட்டங்களுக்கும் இடையே சுமார் 20 அடி தூரமாவது இருக்க வேண்டும். ஆனால், தற்போது குடியிருப்பிலிருந்து 10 அடி தூரத்திலேயே தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. இதனால், வனவிலங்குகள் மிக எளிதாக தேயிலைத் தோட்டங்களில் இருந்து குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம், வனச்சரக அலுவலர்கள் சக்திவேல் மற்றும் சேகர், கிருஷ்ணசாமி, வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன், ஓய்வு பெற்ற வன அலுவலர் தங்கராஜ், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கணேஷ், ஆனந்த் மற்றும் எஸ்டேட் மேலாளர்களும் வனத்துறை பயிற்சி மைய மாணவி நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...