சேஞ்ச் அறக்கட்டளையுடன் இணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

சேஞ்ச் டிரஸ்ட் (Change trust) மற்றும் ரோட்டரி மெட்ரோ பாலிஸ் (Rotary Metro polis) சார்பாக கோவை அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்துதல், ரத்த தானம் வழங்குதல் மற்றும் மரக் கன்றுகள் நடவு செய்தல் ஆகிய பணிகளில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இதில் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் அசோகன், இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சியில் விஜய கார்த்திகேயன் பேசுகையில், "மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்கள் இதோடு சேவையை நிறுத்திவிடக்கூடாது. 



நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முன் உதாரணமாக ரத்தம் தானம் தேவைப்படுபவர்களுக்காக ரத்த தான செயலி ஒன்றை கோவை மாநகராட்சி சார்பில் உருவாக்க உள்ளோம்," என்றார்.

சேஞ்ச் டிரஸ்ட் நிறுவனர் தஸ்லிமா நஸ்ரின் கூறுகையில், "மாணவர்களை சேவை செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வருங்காலங்களில் அவர்கள் அரசு அதிகாரிகளாக வரும் போது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் மாணவர்களிடத்தில் உருவாகும்," என்றார்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ரோட்டரி மெட்ரோபாலிஸ் சார்பாக அரசு மருத்துவமனைக்கு 500 படுக்கை விரிப்புகளும், 70 குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டன.

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...