மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் 7 சவரன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் 7 சவரன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணியம்மாள். இந்த மூதாட்டி தனது மகன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் அனைவரும் வேலைக்கு சென்று விட வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். 

இது தொடர்பாக, திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகிலிருந்த நிறுவனங்களில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்புக் காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.  மேலும், பேருந்து நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரியும் நபர்களை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அடகு கடையில் கோவையைச் சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர் செயினை அடகு வைக்க வந்தார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் மூதாட்டியிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். 

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...