செவிலியர்கள் போராட்டம் வாபஸ்

திருப்பூரில் செவிலியர் மணிமாலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் செவிலியர் மணிமாலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தவர் மணிமாலா. கடலூர் மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக செவிலியராக வெள்ளகோயில் ஆரம்ப சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டார். 

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி மணிமாலா விடுமுறை எடுத்ததற்கு மருத்துவ அலுவலர்கள் அகிலாண்டேஸ்வரி மற்றும் தமயந்தி ஆகியோர் விளக்கம் கேட்டதோடு மணிமாலாவிற்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10-ம் தேதி இரவு வெள்ளகோயிலில் தான் தங்கி இருந்த அரசு குடியிருப்பில் தூக்கிட்டு மணிமாலா தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மணி மாலாவை தற்கொலைக்குத் தூண்டிய அரசு மருத்துவ அலுவர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கூறி கடந்த மூன்று நாட்களாக மணிமாலாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் செவிலியர்கள் காங்கேயம் அரசு மருத்துவ மனை வளாகத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில், மணிமாலாவின் தற்கொலைக்கு காரணமான மருத்துவர்கள் தமயந்தி மற்றும் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரை பணியிட மாற்றம் செய்வதாகவும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும், ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளிப்பு இணை இயக்குநர் (சுகாதாரத்துறை) வடிவேல், திருப்பூர் மாவட்ட துணை இயக்குநர் ஜெயந்தி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மணிமாலாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணிக்கு பரிந்துரைக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...