மலேசியாவில் நடந்த யோகா போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த கோவை மாணவி

கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற 6-வது சர்வதேச யோகா போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட கோவையைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

கோவை : கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற 6-வது சர்வதேச யோகா போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட கோவையைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.



ஜனவரி மாதம் நடைபெற்ற இப்போட்டியில் ஆசியா கண்டத்தை சேர்ந்த இந்திய, மலேசியா, சிங்கப்பூர், இண்டொனேசியா, ஹாங்காங், ரசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். அதில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 

கோவை அடுத்த சோமனூர் பகுதியை சார்ந்த தனியார் பள்ளி மாணவி வைஷ்ணவி (14), கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோன்று 2015 மற்றும் 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் ஆப் யோகா, ஒவர் ஆல் கோல்டு போன்ற பதங்கங்களையும் வென்றுள்ளார். அதேபோல, மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்று பலநூறு பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து வைஷ்ணவி கூறுகையில், "9 வயது முதல் யோகா செய்து வருகிறேன். பள்ளிக்கூடத்தில் விளையாட்டு பிரிவில் யோகா பயில ஆரம்பித்தேன். பின்னர், அது பிடித்துப்போய் முழுவதுமாக யோகா போட்டிகளில் மாவட்டம், மாநிலம், தேசம், சர்வேதேசம் என கலந்துகொள்ள ஆரம்பித்தேன். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. ஒவ்வொரு மாணவரின் தனிதிறமையும் ஊக்குவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகளை எடுத்தால் அனைவரும் வெற்றியடைய முடியும். எனது இந்த முயற்சிக்கு என் பெற்றோர் மற்றும் பள்ளி நீர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது, " என்றார்.

தனியார் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் வைஷ்ணவியின் தந்தை சரவணக்குமார் கூறுகையில், "திறமைசாலிகள் மதிக்கப்பட வேண்டும்.படித்தால் வாழ்க்கையில் முன்னரே மட்டும்தான் முடியும். ஆனால் திறமைகளை வெளிப்படுத்தி அதில் வெற்றியடைந்தால் மட்டுமே இந்த உலகம் நம்மலை திரும்பி பார்க்கும். திறமை உள்ள மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்,"என்றார்.

வைஷ்ணவி சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்க அவரது பள்ளியான பார்க் குளோபல் மிகவும் உறுதுனையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...