நீரா பானம் விற்பனைக்கான உரிமம் விரைவில் வழங்கப்படும் - கோவை மாவட்ட ஆட்சியர்

நீரா பானம் விற்பனைக்கான உரிமம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.


கோவை: நீரா பானம் விற்பனைக்கான உரிமம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என்று கோவை  மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் சுமார் 87 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தென்னை விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில், நீரா பானம் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் 3 நிறுவனங்கள் தென்னை நீரா பானம் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்நிறுவனங்கள் தயாரித்த நீரா பானத்தை சுவைத்து பார்த்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் நீரா உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.



இது தொடர்பாக விநாயகா  தென்னை விவசாயிகள் நிறுவனத்தின் தலைவர் பத்மநாபன் கூறுகையில், "நீரா பான உற்பத்தி தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை அளிக்கும். இந்தாண்டில் தினசரி ஆயிரம் லிட்டர் நீரா தயாரிக்கவும், அடுத்து வரும் ஆண்டுகளில் உற்பத்தி அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். நீரா பானத்தின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் நூறு ரூபாய் என நிர்ணயிக்கப்படலாம்" என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...