கல்லூரி மாணவர் தற்கொலை : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

மலுமச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆட்டோ மொபைல் இரண்டாமாண்டு பயின்று வந்தவர் பிரேம்குமார். சூளகிரி பகுதியை சேர்ந்த இவர் நேற்று கல்லூரி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் , மாணவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக செட்டிபாளையம் காவல்நிலையத்தில் அவரது தந்தை விஸ்வநாதன் புகார் அளித்தார்.

இது குறித்து மாணவர் குறித்து அவரது மாமா ரமேஷ் கூறுகையில், " பிரேம்குமார் இதுவரை எந்த பிரச்சனை குறித்தும் வீட்டிற்கு தெரியப்படுத்தியதில்லை. அவர் நன்றாகப் படிக்கும் மாணவர். கல்லூரி வீடு என்று சுற்றுவட்டாரங்களில் நற்பெயரை கொண்டவர். 

கல்லூரி நிர்வாகம் பிரேமின் மரணம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பதில் தருகிறது. அந்த கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு காமிரா இல்லை" என்றார்.

இந்த நிலையில் மாணவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவனின் உடலை பெற்றுச் சென்றனர்.

இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...