சுற்றுலாப் பயணிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்த வனத்துறையினர்

கொடைக்கானலில் புல்வெளியில் நடனமாடிய சுற்றுலாப் பயணிகளை இரண்டு நாட்களாகத் தனியறையில் அடைத்துவைத்து, வனத்துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொடைக்கானலில் புல்வெளியில் நடனமாடிய சுற்றுலாப் பயணிகளை இரண்டு நாட்களாகத் தனியறையில் அடைத்துவைத்து, வனத்துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டு முழுவதும் தங்கும் விடுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள், ஆஃப் சீஸன் எனப்படும் சுற்றுலாப் பயணிகள் குறைவாக உள்ள சமயங்களில் வெளியே அழைத்துச் செல்லப்படுவது வழக்கம், அவ்வாறு, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக, கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் 22 பேரை, அதன் உரிமையாளர் சுற்றுலா அனுப்பியுள்ளார். 

கவுஞ்சி கிராமத்துக்குச் சென்ற அவர்கள், அங்கிருக்கும் அரசுப் பள்ளிக்கு எதிரேயிருந்த வருவாய்த்துறைக்குச் சொந்தமான புல்வெளியில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கொடைக்கானல் வனத்துறை ஊழியர்கள், இது வனப்பகுதி, இங்கு வரக்கூடாது. அத்துமீறி வந்துள்ளதால் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்கள். சுற்றுலா சென்றவர்களோடு இருந்த உள்ளூர் நபர்கள், இது வருவாய்த்துறை இடம்தானே, நீங்கள் ஏன் அபராதம் விதிக்கிறீர்கள்' எனக் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதைத்தொடர்ந்து, அங்கு வந்த 30-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், 12 நபர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், 36 மணி நேரமாகியும் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வராததால், அவர்களின் உறவினர்கள், கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து நேற்று மதியம், 75,000 ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு அழைத்துச் செல்லுங்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், உறவினர்கள் அபராதத் தொகையுடன் அங்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கு சென்றவர்களுக்குக் கடுமையான அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கடுமையான காயங்களுடன் அமர்ந்திருந்தனர். 

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட சையது அபுதாகிரியிடம் கேட்டபோது, 'வனத்துறையினர், எங்களைக் கொலைக் குற்றவாளிகளைப் போல நடத்தினார்கள். கடுமையாகத் தாக்கியதுடன், மூர்ச்சையானவர்களைத் தெளியவைத்து தெளியவைத்து அடித்தார்கள். எங்களை விட்டுவிடுங்கள் எனக் கதறியபோதும், மனம் இரங்காமல் பூட்ஸ் காலால் மிதித்து உதைத்தார்கள். கால் எலும்பு முறியும் அளவுக்கு அடித்தார்கள். அப்படி நாங்கள் என்ன குற்றம் செய்துவிட்டோம். புல்வெளியில் நடனமாடியது அவ்வளவு பெரிய குற்றமா' என்றபடிக் கதறினார். கொடைக்கானல் வனத்துறையினரின் மனிதாபிமானமற்ற இந்தச் செயலுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடுக்க உள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...