உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 8 பேர் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  



அங்கேரிபாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் கே.ஜி. நகரில் நைஜீரியர்கள் ஒருசிலர் பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாகவும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து. மாநகர போலீஸ் ஆணையர் நாகராஜன் உத்தரவின் பேரில் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜன்பாபு தலைமையில் போலீசார் நைஜீரியர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது, அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால், அந்த வீட்டில் தங்கியிருந்த 6 நைஜீரியர்களை அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நுவான்க்பே ஒனேகாக் (31), நிக்கோலஸ் உச்சேனா யூசிப் (38), ஒனாஜிடே (31), நெல்சன் ஓ பேக்போ (32), நுவோனு ஓ க்வூடி (34), டாய் டினேபில்சி (35) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாஸ்போட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் ஸ்ரீநகர் பகுதியில் தங்கி பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், அந்த 6 பேரிடமும் அவர்களுடைய சொந்த நாட்டில் வழங்கப்பட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. இதையடுத்து, 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பூர் ஜே.எம்.4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்பு சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதேபோல, திருப்பூர் ராயபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் (30), ஜான்சன் (32) ஆகியோரை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...