காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பால் இருமாநில எல்லைகளில் அவதிப்பட்ட பயணிகள்

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, தமிழகம், கர்நாடக எல்லையில் பேருந்துகள் மாறி, மாறி ஏறிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

நீலகிரி : காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, தமிழகம், கர்நாடக எல்லையில் பேருந்துகள் மாறி, மாறி ஏறிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். 



காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, நீலகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகா மாநிலம் செல்லும் அரசு பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக காலை முதலே எல்லையில் நிறுத்தப்பட்டன. பின்னர், எல்லை வரை இயக்கப்பட்டன. தீர்ப்பு வெளியானதை அடுத்து தமிழக எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடலூர் டிஎஸ்பி பி.ரவிசங்கர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டது.



தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கக்கநல்லா சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. கர்நாடகாவிலிருந்து வந்த வாகனங்களும் கக்கநல்லாவில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பேருந்துகளில் வந்த பயணிகள் இறக்கப்பட்டனர். பயணிகள் பேருந்துகளிலிருந்து இறங்கி நடந்து வந்து சோதனைச்சாவடியை கடந்து தமிழக எல்லையில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தகளில் ஏறி உதகை பயணித்தனர். ஆனால், சுற்றுலா வாகனங்கள் இரு மாநிலத்துக்குள்ளும் நுழைய போலீஸார் அனுமதிக்காததால், சுற்றுலாப் பயணிகள் செய்வதறியாது எல்லையில் தவித்தனர். 

Newsletter

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...