காவிரி தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் பலவீனம் வெளிப்படுகிறது: இயக்குநர் ராஜு முருகன்

தமிழகத்தின் பலவீனத்தை காவிரி தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவும், இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகத்தின் பலவீனத்தை காவிரி தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவும், இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தனது அடுத்த படமான ஜிப்ஜி, எல்லாப் பாடங்களை போல மக்களுக்கான சமூகம் சார்ந்த அரசியல் படமாக இருக்கும். தமிழக சூழலில் சாதி அபாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதி ஆணவ கொலைகளுக்கு பின்னால் அரசியல் இருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் சாதியம், மதவாதம் தீவிரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சாதி, மதவாதத்தில் இருந்து பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துகள்தான் மக்களைக் காப்பாற்றி கொண்டிருக்கிறது. இதனை உடைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு நிர்வாகம் பலவீனப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் மக்கள் ஜோக்கர்கள் ஆக்கப்படுகின்றனர். தமிழகத்தின் நிலை எவ்வளவு பலவீனப்பட்டுள்ளது என்பதை காவிரி தீர்ப்பு காட்டுகிறது. இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...