சாலை விபத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த சாலை விபத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர் பலியானார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த சாலை விபத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர் பலியானார்.

பல்லடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவரும் போலீஸ் நண்பர்கள் குழுவை சார்ந்த ஜெகதீஸ் என்கிற இளைஞரும் இருசக்கர வாகனத்தில் இரவு ரோந்து பணிக்காக சென்றுள்ளனர். திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது பொதுப்பணித்துறை குடியிருப்பு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துள்ளானதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஸ் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மேலும் உடன் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரும் படுகாயம் அடைந்தனர்.

அப்போது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயம் அடைந்த ஜெகதீசை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கோவை தனியார் மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...