உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாவது எப்போது? : பொதுமக்கள் கேள்வி

உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

நீலகிரி: உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமவெளி பிரதேசங்களில் இருந்து வரும் நடுத்தர மக்கள் உதகைக்கு சுற்றுலா வருவதற்கு அரசு பேருந்துகளில் உபயோகித்து வருகின்றனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் சமவெளி பிரதேசங்களுக்குச் செல்ல அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர். இதனால் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்நிலையில் உதகை மத்திய பேருந்து நிலையம் போதிய பராமரிப்பு இல்லாததால் பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் மழை நீர் சூழ்ந்தும், சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 121-வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உதகை மத்திய பேரூந்து நிலையத்தை ரூ.2 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையமாக மாற்றப்படும் என வாக்குறுதியளித்தார்.

இந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...