புகழ்பெற்ற “உதகை இத்தாலியன் கார்டனை" உருவாக்கியது யார் தெரியுமா..?

நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான உதகை இத்தாலியன் கார்டன் உருவான வரலாற்றை விளக்கும் தகவல் பலகையை பூங்கா நிர்வாகம் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளது.

நீலகிரி: நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான உதகை இத்தாலியன் கார்டன் உருவான வரலாற்றை விளக்கும் தகவல் பலகையை பூங்கா நிர்வாகம் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளது.



உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள உதகை நகரிற்குப் பெருமை சேர்ப்பது நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவாகும். இங்குள்ள பல்வேறு தாவரங்கள் உலகில் ஒருசில நாடுகளில் மட்டுமே காணப்படும் தாவர வகைகளாக உள்ளன. தாவரவியல் பூங்காவின் மேற்பகுதியில் இத்தாலியன் கார்டன் உள்ளது. இத்தாலிய வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கார்டனை காணாமல் சுற்றுலா பயணிகள் செல்வதில்லை.



இத்தாலியன் கார்டன் உருவாக்கப்பட்டதில் ஒரு வரலாறு உள்ளது. அந்த வரலாறு பூங்காவை பார்த்து செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஏன் உள்ளூர் மக்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பிலை. இந்த கார்டன் உருவாக்கக் காரணமாக இருந்தது இத்தாலிய கைதிகள் தான். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் தங்களது படையை எதிர்த்து போரிட்ட இத்தாலிய ராணுவ வீரர்களைப் பிணை கைதிகளாகப் பிடித்தது பிரிட்டீஷ் அரசு. அவ்வாறு கைது செய்யப்பட்ட இத்தாலிய கைதிகளை பிரிட்டீஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவிற்கு நாடு கடத்தியது. இத்தாலி போன்ற காலநிலை நிலவியதால் கைதிகள் அனைவரும் நீலகிரி மாவட்டத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

அவ்வாறு நாடு கடத்தி நீலகிரியில் சிறை வைக்கப்பட்ட கைதிகள் இத்தாலியன் பூங்காவை வடிவமைத்தனர். சிறிய சிறிய பாத்திகள் அமைக்கப்பட்டு, அதில் பலவிதமான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. மேலும், பிறை நிலவு வடிவில் சிறியகுளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிபட்ட இந்த சுவாரஸ்யமான தகவல் நம்மில் பலருக்கு தெரியாது.



இது குறித்து பூங்கா நிர்வாகம் தெரிவிக்கும் போது “வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் பூங்கா நிர்வாகம் சார்பில் இத்தாலியன் கார்டன் நுழைவு பகுதியில், கார்டன் உருவாக்கப்பட்ட முறை குறித்த தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்“.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...