அடுத்தடுத்த பொதுத்தேர்வுகளால் அலறும் மாணவர்கள்; மனரீதியாக தேர்வுகளை எதிர்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை

அரசின் புதிய கல்விக் கொள்கையால், அடுத்தடுத்து பொதுத்தேர்வுகளை சந்திக்க இருக்கும் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், தேர்வுகளை மனரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.


கோவை: அரசின் புதிய கல்விக் கொள்கையால், அடுத்தடுத்து பொதுத்தேர்வுகளை சந்திக்க இருக்கும் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், தேர்வுகளை மனரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நடைபெற்று வந்தது. தற்போது அடுத்தடுத்த பொதுத்தேர்வுகளால் பள்ளி மாணவர்கள் கலகத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் கூறும் ஒரே பதில், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வுகள் இதை எப்படி மனரீதியாக எதிர்கொள்வது, இது கடினமான விஷயம் என்றனர். எனினும், ஒரு சில மாணவர்கள் இது சாத்தியம்தான் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதுவதால் கல்லூரி செல்லும் போது படிப்பதற்கு எளிதாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் வாங்கினாலோ அல்லது ஆசிரியர் திட்டினாலோ அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு சில மாணவர்கள் இருக்கும் இந்த சூழ்நிலையில், இந்தத் தொடர் தேர்வு முறைகள் கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற தேர்வு முறைகளை மனரீதியாக எதிர்கொள்வது சிறந்த பயன் தரும் என மருத்துவ ரீதியாகக் கூறப்படுகிறது. இது குறித்து கோவையை சார்ந்த மனநல ஆலோசகர் எஸ். ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மாணவர்களுக்கு கல்வி முறையில் மாற்றம் வேண்டும். அக்காலத்தில் கல்வி முறையில் நல்ல பண்புகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. மாலையில் மாணவர்கள் விளையாட செல்வார்கள். இதனால் அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நன்றாக இருந்தனர்.

பெரும்பாலும் அறிவு ரீதியாக மட்டுமே தற்போதைய கல்வி முறை உள்ளது. உணர்வு ரீதியாக இல்லை. உதாரணத்திற்கு, அரியலூர் மாணவி அனிதா பிளஸ்2-வில் 1,176 மதிப்பெண் பெற்றிருந்த போதும், நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பு படிக்க முடியவில்லை என வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. அனிதாவிற்கு உணர்வு ரீதியான கல்வியையும் கொடுத்திருந்தால் அவர் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்.

மாணவர்கள் பொதுத்தேர்வுகளை கண்டு அஞ்சாமல் இருக்க அவர்களுக்கு உணர்வு ரீதி கல்வியும், பெற்றோருக்கு அவர்களை எப்படி படிக்க வைப்பது என்கிற பயிற்சியும் அவசியம்," என்றார்.

இந்த கல்வி முறையே சிறந்தது, இதனால் பொதுத்தேர்வுகள் சுலபம் என தனியார் பள்ளியில் படித்து வரும் பத்தாம் மாணவர் அப்துல் ரசிக் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், "10,11,12 ஆகிய மூன்றும் கல்லூரி படிப்புகளுக்கு அடித்தளம். பொதுத்தேர்வின் காரணமாக அடிப்படையில் இந்த மூன்றாண்டும் சிறப்பாக கல்வி பயில முடியும். பெற்றோரும் ஆசிரியரும் மாணவர்களை வருத்தாமல் அவர்களுக்கு ஏற்றவாறு கல்வியை சொல்லிக்கொடுக்க வேண்டும்," இவ்வாறு அந்த மாணவர் கூறினார்.

இந்த தொடர் பொதுத்தேர்வின் காரணமாக பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பாலிடெக்னிக் படிப்பில் சேரவுள்ளதாகவும் மாணவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஒருவர் கூறுகையில், "பொதுத்தேர்வு என்றாலே பயம். பெற்றோரும், ஆசிரியர்களும் தேர்வு குறித்து எங்களிடம் நிறைய நேரம் படிக்க சொல்கிறார்கள். தனியார் பள்ளிகளிலோ இன்னும் அவலநிலை டியூசன் செண்டர்களில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம் இடையில் நீட் தேர்விற்கும் பயிற்சி வகுப்புகள். இதை எல்லாம் நினைக்கையில் பத்தாம் வகுப்பு படித்தவுடன் பாலிடெக்னிக் போய்விடாலம் என உள்ளேன்," என்றார்.

அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் வகுப்பு மாணவர் ஒருவர் கூறுகையில், தினமும் படிப்பே வாழ்க்கையாகி போனது. பொதுத்தேர்வு ஒருவித சலிப்பையும், வெறுப்பையும் தருகிறது, என்றார்.

மாணவர்களிடையே இதுபோன்ற பல்வேறு விதமான எண்ணங்கள் எழுந்துள்ள நிலையில், பொதுத்தேர்வு முறைகள் குறித்து மாணவர்களிடம் கலந்து ஆலோசனை செய்து கல்வியாளர்களிடம் பாட முறைகளில் உணர்வு ரீதியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...