முன்னாள் துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனு மீது 22-ம் தேதி விசாரணை

பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி தாக்கல் செய்த ஜாமின் மனு 22-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கோவை : பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி தாக்கல் செய்த ஜாமின் மனு 22-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சார்பில் ஜாமின் கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம், அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமின் மனுவை நிராகரித்தது. 

இதனால், கடந்த வாரம் கணபதியை 4 நாள் காவலில் எடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று ஜாமின் கேட்டு இரண்டாவது முறையாக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...