முதுமலை புலிகள் காப்பகத்தை அலங்கரித்த ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள்

காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே உணர்த்தும் ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் (Flame of Forest) பூக்கள் முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் பூத்து குலுங்கும் பூக்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி : காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே உணர்த்தும் ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் (Flame of Forest)  பூக்கள் முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் பூத்து குலுங்கும் பூக்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன. முதுமலை வனப்பகுதியில் தற்போது வறட்சி துவங்கியுள்ள நிலையில், வன முழுவதும் காய்ந்து காணப்படுகின்றது. இந்த நிலையில், காய்ந்த வனங்களுக்கு இடையே தீப்பற்றி எரிவது போல அந்தப் பூக்கள் காட்சியளிக்கின்றன. தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வனப்பகுதியில் தீ எரிவது போன்ற தோற்றத்தை இந்த பூக்கள் ஏற்படுத்துவதாலே, இதற்கு ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் எனப் பெயர் வந்தது. 

ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள் காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே உணர்த்த கூடிய பூ என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தப் பூக்கள் வனப்பகுதியில் பூத்தால் வசந்தகாலம் முடிந்து வறட்சி துவங்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இவற்றை தாண்டி ஃப்ளேம் ஆப் ஃபாரஸ்ட் பூக்கள் வறட்சி காலங்களில் பறவைகள் மற்றும் அணில், குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு உணவு அளிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த மரங்களை சுற்றி ஏராளமான பறவைகளை எந்நேரமும் காண முடிகின்றது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...