பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தொழிற்பயிற்சி நிலையங்களில், பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களை தொழில் பழகுநர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை : தொழிற்பயிற்சி நிலையங்களில், பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களை தொழில் பழகுநர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தொழில் பழகுநர் சட்டம் 1961-ன் படி அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களை தொழில் பழகுநர்களாக சேர்த்துக்கொண்டு தொழிற்பழகுநர்களின் எண்ணிக்கையினை உயர்த்த வேண்டும். தேவையான பயிற்சி உள்கட்டமைப்பு கொண்ட பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில், மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 2.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை தொழில் பழகுநர் பயிற்சியில் ஓராண்டு காலத்திற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசால் 19.08.2016 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய தொழில்பழகுநர் அபிவிருத்தி திட்டம்  அமல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தொழிற்பழகுநர்களுக்கு வழங்கும் பரிந்துரைக்கப்பட்ட உதவித்தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1,500 வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். நேரடியாக தொழிற்பழகுநராக சேருபவர்களுக்கான அடிப்படை பயிற்சிக்கான செலவினத்தை 500 மணிநேரத்திற்கு அல்லது 3 மாதத்திற்கு, தொழிற்பழகுநருக்கு ரூ. 7,500 வீதம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். உதவித்தொகை, செலவு ஈட்டுத்தொகையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட நிறுவன வங்கிக் கணக்குக்கு திரும்ப செலுத்தப்படும். 

இது தொடர்பான விபரங்களை மேலும் அறிய http:/ncvtmis.gov.in மற்றும் www.apprenticeship.gov.in. என்ற இணையதள முகவரியிலும், இத்திட்டத்தை செயல்படுத்துதல் குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்,  கோவை -29 என்ற முகவரியில் நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். மேற்படி NAPS திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...