சர்ச்சைக்குரிய ஆடியோவிற்கு காழ்ப்புணர்ச்சியே காரணம்: பாரதியார் பல்கலை., பேராசிரியர் விளக்கம்

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆடியோ, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களுள் ஒருவரான சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.

கோவை: சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆடியோ, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களுள் ஒருவரான சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி (67), அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியதாக தொலைநிலைக் கல்வி இயக்குநர் மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சொர்ணலதா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த லஞ்ச ஊழல் வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவனிடம் பேராசிரியர் ஒருவர் தங்கம், வெள்ளியில் பரிசுப் பொருட்களை கேட்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், வாய்மொழி தேர்வில் பங்குபெற இருக்கும் ஒரு மாணவனிடம், கல்வியியல் பேராசிரியரும், சிண்டிகேட் உறுப்பினருமான சிங்காரவேலன் பரிசுப் பொருட்களை கேட்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆடியோவிற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிங்காரவேலு, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது குரல் சித்தரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளதாகவும், தனது குரலை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் அளிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள குரல் என்னுடையதல்ல. பொய்யான இந்தக் குரலை ஆய்வு செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் இருப்பவர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்புக்கான போட்டி பொறாமைகளால் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தப் போலியான ஆடியோவை பரப்பி வருகின்றனர். என் மீது கலங்கம் ஏற்படுத்துபவர்கள் என் குரலா என ஆய்வு செய்யட்டும். தவறுகளில் ஈடுபடாதவர்களை வேண்டுமென்றே குற்றப்படுத்துவது ஏற்புடையதல்ல.



போலியான ஆடியோ தொடர்பாக முறைப்படி நிர்வாகத்திடம் புகார் அளித்துவிட்டேன். அடுத்தகட்டமாக என் மீது கலங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்த முறைகேடான எந்த போனும் வரவில்லை. ஆகவே, மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் போலவே, அடுத்தடுத்து மற்ற சிண்டிகேட் உறுப்பினர்களைப் பொய்யாக கலங்கப்படுத்தி சித்தரிக்க பல்கலைக்கழகத்தில் சதி திட்டங்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...