கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேரப் போக்குவரத்துக்கு அனுமதி

நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மலைப் பாதைகளையும், அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மாவட்டமாகும். குறிப்பாக, கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைகளை கொண்ட மலைப் பாதையாகும். இந்த மலைப்பாதையில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், இந்த மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்லவும், இரவு 9 மணிக்கு மேல் வாகனங்களை இயக்கவும் தடை விதித்தது.

இந்த நிலையில், உதகையை அடுத்த மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும் திங்கட்கிழமை நடைபெறுவதையொட்டி இன்று முதல் அப்பகுதில் கோவில் திருவிழா களைக் கட்டியுள்ளது. ஆகவே, இந்தக் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் கல்லட்டி மலைப்பாதையில் இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பலத்த பாதுகாப்புடன், காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுரைகள் வழங்கிய பின்னரே, கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...