கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடத்தை வழங்கிய உரிமையாளர்கள்

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கான நிலத்தை வழங்க பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருசில உரிமையாளர்கள் அரசுக்கு இடத்தை கொடுத்துள்ளனர்.

கோவை : கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கான நிலத்தை வழங்க பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருசில உரிமையாளர்கள் அரசுக்கு இடத்தை கொடுத்துள்ளனர். 

பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் அதிக அளவு வந்து செல்லும் வகையில் கடந்த 2௦10-ம் ஆண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதன் காரணமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, விரிவாக்கப் பணிக்காக எடுத்துக்கொள்ளும் இடங்களுக்கு சந்தை மதிப்புப்படி நிவாரண தொகை அளிக்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், மக்களுக்கு சாதகமாகவே தீர்ப்பும் வந்தது. அதனை வழங்க முன்வராத மாநில அரசு, நிலத்தின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையே நடத்தி வந்தது. இதனால், நிலம் கிடைக்காத காரணத்தால், கோவை சர்வதேச விமான நிலையத்தை, விரிவாக்கம் செய்வது, தொடர்ந்து தாமதமாகி வந்தது. 

இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடத்தை வழங்க ஒருசில நில உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர். இருகூர் மற்றும் காளப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 பிளாட்களை அரசு கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதாவது, எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனியில் உள்ள குடியிருப்பு பகுதி நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900 -யும் வழங்கப்பட்டது. காளப்பட்டி மற்றும் சின்னியம்பாளையம் பகுதி மக்கள் அரசின் முந்தைய விலையையே ஒப்புக் கொண்டு இடத்தை வழங்கியுள்ளனர். 

இதனிடையே, எஞ்சிய நில உரிமையாளர்களில் ஒருவர் கூறுகையில், ''சதுர அடிக்கு ரூ. 3,000 கொடுத்தால் இடத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம்,'' என்றார்.   

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...