கோவையில் தாமதமாகும் அம்மா இருசக்கர வாகனம் மானிய திட்டம்

தமிழகத்தில் அ.தி.மு.க., அரசின் சார்பில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ள இருசக்கர வாகன மானிய திட்டம், கோவை மாவட்டத்தில் தாமதாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை : தமிழகத்தில் அ.தி.மு.க., அரசின் சார்பில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ள இருசக்கர வாகன மானிய திட்டம், கோவை மாவட்டத்தில் தாமதாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பணிக்கு செல்லும் பெண்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், அவர்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவர் மறைந்த நிலையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் கோப்பாக, இருசக்கர வாகன மானிய திட்டத்தில் கையொப்பமிட்டார். தொடர்ந்து மானிய தொகையும் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, இந்த திட்டம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று (பிப்.,24) இத்திட்டத்தை பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைக்கிறார். 

முன்னதாக, கடந்த ஜன.22-ம் தேதி முதல் இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் வழங்கப்பட்டன. விண்ணப்பிக்க கடைசி நாளான பிப்.10-ம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் 22,912 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்தனர். இந்தாண்டு, 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 விண்ணப்பதாரர்களில் தகுதியான ஒரு லட்சம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அம்மா இருசக்கர வாகன மானிய திட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இத்திட்டம் அமல்படுத்த இன்னும் 2 வாரங்கள் ஆகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், கோவை மாவட்டத்தில் 22,912 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வெறும் 3,000 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

பஞ்சாயத்து அலுவலகங்களில் 6,182 விண்ணப்பங்களும், 3 நகராட்சிகளில் 959 விண்ணப்பங்களும், நகர் பஞ்சாயத்தில் 8,588 விண்ணப்பங்களும், மாநகராட்சியில் 10,183 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 1,203 பேருக்கும், நகர் பகுதியில் இருக்கும் 3,746 பேர் என மொத்தம் 4,949 வாகனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவற்றில், 22 சதவீதம் எஸ்.பி. பிரிவினருக்கும், 1 சதவீதம் எஸ்.டி. பிரிவினருக்கும், 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...