யானைகள் முகாமில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மறுசுழற்சிக்காக ஒப்படைப்பு

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமின் போது சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் மறுசுழற்சிக்காக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமின் போது சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் மறுசுழற்சிக்காக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பத்தாவது யானைகள் நலவாழ்வு முகாம் கடந்த மாதம் நான்காம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 31 யானைகளும், புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 33 யானைகள் பங்கேற்றன. இந்த முகாம் கடந்த 20-ம் தேதி நிறைவடைகிறது. இதனால், முகாமில் பங்கேற்ற யானைகள் பலத்த ஏற்பாடுகளுடன், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 



இந்த நிலையில், யானைகள் முகாம் நடைபெற்ற பகுதியில் பிளாஸ்டிக், பாலிதீன் & பாட்டில்கள் என 53 மூட்டை அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டன. கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷின் வழிகாட்டுதலின்படி, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் ரவி மற்றும் வனப்பணியாளர்களுடன் இணைந்து நேட்சுரல் லவ்வர்ஸ் என்னும் தன்னார்வ அமைப்பினர்கள் 65 பேர் இப்பணியை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இக்கழிவுகள் இன்று நகராட்சி வசம் மறுசுழற்சிக்கு வழங்கப்பட்டது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...