சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என உறுதிசெய்ய வேண்டும் - எம்.எல்.ஏ., நா.கார்த்திக்

சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவை: சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவையின் பிரதான குடிநீரான சிறுவாணி அணையிலிருந்து, அதிகப்படியான நீரை கேரளா அரசு ஆற்றில் திறந்துவிட்டுள்ளது. இதனால், சிறுவாணி அணையில் தண்ணீர் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க., சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

 

கோவை மாநகராட்சியில் தினமும் 10 லட்சம் மக்களுக்கு சிறுவாணி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணைக்கட்டு பகுதியிலிருந்து தினமும் 75 எம்.எல்.டி., தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகின்றது. வரும் ஆகஸ்ட் மாதம் வரை 101 எம்.எல்.டி., குடிநீர் எடுக்க முடியும் என்ற நிலையிலும் கூட குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில், இப்போது 75 எம்.எல்.டி., குடிநீர் மட்டுமே எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள அரசு சிறுவாணி அணையிலிருந்து, ஆதிவாசி மக்களுக்கும், விலங்குகளுக்குமாக வினாடிக்கு 60 லிட்டர் குடிநீரை திறந்து விட்டுள்ளனர். ஏற்கனவே, பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு சிரவயல், பாடவயல், தேக்குவட்டை ஆகிய 3 இடங்களில் தடுப்பணையை கட்டியுள்ளது. இதன் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது, சிறுவாணி அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிட்டுள்ளதால், சிறுவாணி அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.

தற்போது தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினாலும் அது உறுதி செய்யப்பட வேண்டும். தமிழக அதிகாரிகள், கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்து சென்று பார்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையின் 5 குடிநீர் திட்டங்களில் சிறுவாணி திட்டம் பிரதானமாக உள்ளது. எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் கட்சி தலைமையுடன் ஆலோசித்து

பொதுமக்கள் திரட்டி போராட்டம் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...