குப்பைக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி ஆற்றின் அவலம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் ஒருபகுதி பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் ஒருபகுதி பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். 

மேட்டுப்பாளையம் பகுதியில் பாவனி ஆறு பாயும் வழித்தடம் ஒன்று காந்தி மைதான் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கு மது அருந்த வரும் குடிமகன்கள், மதுவை அருந்திவிட்டு, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கவர்களை பவானி ஆறு பாயும் வழித்தடத்தில் வீசியெறிந்து செல்கின்றனர். இதனால், அங்கு, பவானி ஆறு பாயும் வழித்தடம் இருந்ததா என்ற சந்தேகம் எழும்படியான நிலை உருவாகியுள்ளது. மேலும், குடிபோதையில், போதை ஆசாமிகள் இந்தப் பகுதியில் மலம் கழித்துவிட்டு செல்கின்றனர்.



கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீராதரமாக விளங்கி வரும் பவானி ஆற்றின் பகுதியில் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், உடல்நலப் பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையை தூய்மைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...