உம்மன் சாண்டிக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பேன் - சரிதா நாயர்

சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி எதிராக வாக்குமூலம் அளிக்க இருப்பதாக நடிகை சரிதா நாயர் கூறியுள்ளார்.


கோவை: சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி எதிராக வாக்குமூலம் அளிக்க இருப்பதாக நடிகை சரிதா நாயர் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார்.

காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜனிடம் ரூ.28 லட்சம், ஊட்டியைச் சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோவிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இத்தன்பேரில் சரிதா நாயர்,அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜரான பின் வெளியே வந்த சரிதா நாயர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காற்றாலை மோசடி வழக்கு சமாதானமாக முடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர் உதவியாளர் ரவி, கணவர் ராதாகிருஷ்ணன், மற்றும் தம் மீதான வழக்குகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி உள்ளிட்ட 19 பேர் மீது புதிய வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற மார்ச் 1ம் தேதி துவங்க உள்ளதாகவும் விசாரணை கமிசனில் அளித்த தகவல்களின் அடிப்படையில் உம்மன் சாண்டிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...