மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்

மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

கோவை: மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவரும், தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்க்கும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வினய் அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகளவில் இந்திய மருத்துவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் 90 சதவிகிதம் இந்திய மருத்துவர்களே உள்ளனர். நேற்று சத்திஸ்கரில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பது உண்மையே. வெளி மாநிலத்தில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.



5 வருடத்தில் 36 தேர்வுகள் எழுது வேண்டும். 7 நாட்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கூடுதல் பணிச் சுமை காரணமாக மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வருகிறது. டெல்லியில் மருத்துவ மாணவர்கள் சரவணன் மற்றும் சரத்பாபு ஆகிய இருவர் தற்கொலையின் போதே இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு மூன்று கோரிக்கைகள் வைத்தது. அதை நிறைவேற்றி இருந்தால் ராமேவேஸ்வரம் மாணவரின் தற்கொலை நிகழ்ந்து இருக்காது. 

இரண்டு மாணவர்களின் மர்ம மரணத்தின் போதே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்போதே வலியுறுத்தினோம். தகுதி அடிப்படையில் சேரும் மாணவர்களின் மரணத்தில் உள்நோக்கம் உள்ளதா என்பதில் அறிந்தால் மட்டுமே மேலும் மாணவர்களின் மரணம் தொடராமல் இருக்கும். மாணவர்களின் நலனில் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ உதவி மையம் அமைக்க வேண்டும். தமிழகத்தைப் போன்று மன அழுத்தம் காரணமாக மற்ற மாநிலங்களிலும் மாணவர்களின் மரணம் தொடர் கதையாகி வருகிறது. திருப்பூர் மாணவர்களின் மரணத்தில் இது வரை டெல்லி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், மூன்று மாணவரின் தற்கொலைக்கான உரிய காரணத்தை அரசுகளும், காவல்துறையினரும் துரிதமாக விசாரிக்க வேண்டும்." என்றார் 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...