பயிற்சியுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் - கோவை மாவட்ட ஆட்சியர்

பயற்சியுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

கோவை: பயற்சியுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவுரை வழங்கியுள்ளார்.



கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெற்றிப் படிக்கட்டு பொதுத்தேர்வில் பங்கேற்கும் ஆதிதிராவிட உண்டு உறைவிட பள்ளி, பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதி மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் 2016-17 கல்வி ஆண்டில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், " தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து ஏழை எளிய மாணவ மாணவியர்களும் உயர்கல்வியை எளிதாக பெற வழிவகை செய்துள்ளது. இவ்விழா பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை சுடர் விடச்செய்யும் விழா. 

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அசாத்திய திறமை பெற்றவர்களாகவும், எச்சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் விளங்குகின்றனர் என்பது சமீப காலமாக நிஜமாகி வருகின்றது. 

போதிய பயிற்சியும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இவ்விழாவிற்கு வருகை புரிந்துள்ள மாணவ மாணவியர்கள் அனைவரும் வரும் காலத்தில் இந்திய நாட்டின் முக்கிய பணிகளை அலங்கரிப்பவர்களாக திகழ வேண்டும்." என்றார். 

இவ்விழாவில் மாவட்ட காவல் ஆணையர் பெரியய்யா, கோயம்புத்தூர் மாவட்ட பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் ஆர்.மகாலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...