சிக்னலை மதிக்காத தனியார் பேருந்துக்கு அபராதம் : துரிதமாக செயல்பட்ட துணை ஆணையர்

கோவையில் போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : கோவையில் போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை புரூக்பாண்ட் சாலை சிக்னலிக் நேற்று  TN 38 CD 8181 என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து ஒன்று சிக்னலையும், போக்குவரத்து விதி முறைகளையும் மதிக்காமல் ஒரு வழிப்பாதையில் சென்றது. 

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 

பொதுமக்கள் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று புகார்கள் எழுந்தன. 

இதைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்க கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் உத்தரவிட்டார். 

அந்த உத்தரவின் பேரில் வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு இன்று அந்த தனியார் பேருந்து ஓட்டுநரை மடக்கிப் பிடித்த மாநகர போக்குவரத்து போலீசார் சிகனலை மதிக்காமல் சென்றதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்.

விதி மீறல் குறித்த புகார் எழுந்தவுடன் துரிதமாக செயல்பட்டு அபராதம் விதித்த துணை ஆணையருக்கும் , மாநகர போலீசாருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...