கார்த்திக் சிதம்பரம் கைது

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது இந்திராணி முகர்ஜியின் மீடியா நிறுவனத்திற்கு சாதகமாக அனுமதி அளித்தார் என்றும், இதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் அட்வான்டேஜ் டிரேடிஜிக் கன்சல்டிங் நிறுவனம் வழியாக ரூ.10 லட்சம் பெற்றது என்றும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல் டெல்லி, மும்பை, குர்கான் மற்றும் நொய்டா உள்பட நாடு முழுவதும் 14 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், அன்னிய முதலீடு வழங்கியதில் பலகோடி ரூபாய் கைமாறியதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ப.சிதம்பரம் உறவினர்கள் சஜய் சம்பூர்த்தி, ராம்ஜி நடராஜன், கைலாசம், மனோஜ் மோகன்கா உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முறைகேடுகளுக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

இந்த தொடர் சோதனைகளைத் தொடர்ந்து கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன், தொழில் ரீதியான பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக லண்டனில் தங்கியிருந்த கார்த்திக் சிதம்பரம் இன்று காலை சென்னை திரும்பினார். இதனைத் தொடர்ந்து அவரை சி.பி.ஐ., அதிகாரிகள் அவரது வீட்டில் கைது செய்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ததாக சி.பி.ஐ., அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சர்ஜிவாலா, பா.ஜ.க., அரசின் நிதி முறைகேடுகள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஷி, துவர்கா தாஸ் உள்ளிட்டோரை காப்பாற்ற நினைக்கும் பா.ஜ.க., அரசு, மக்களை ஏமாற்ற காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...