மார்ச் 5-ம் தேதி ராணுவ தளவாடங்கள் குறித்த கண்காட்சி தொடக்கம்

இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சி கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் மார்ச் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.


கோவை: இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சி கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் மார்ச் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

கடந்த மாதம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்த போது, கோவையில் பாதுகாப்புத்துறை சம்பந்தமான ஒரு கண்டுபிடிப்பு மற்றும் அடைகாக்கும் மையத்தை உருவாக்க கொடிசியாவிற்கு ரூ. 20 கோடி வழங்குவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து கோவை பிராந்தியத்தில் உள்ள சிறு, குறு மத்தியரக தொழில் நிறுவனங்களால் ராணுவ தளவாடங்களில் எந்த வகையிலான பொருட்களை தயார் செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வதற்காக பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக இந்தக் கண்காட்சியில் பங்கு பெறுகின்றன.

உள்நாட்டிலேயே தயாரிக்கும் ராணுவ தளவாடங்களில் 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற இருக்கின்றன. இந்தக் கண்காட்சியால் சிறு, குறு மற்றும் மத்திய தொழில்துறை நிறுவனங்களால் ராணுவ தளாவடங்களின் பொருட்கள் குறித்த அடிப்படையை தெரிந்து கொள்வதற்காக பொது துறை நிறுவனங்களான பாரத் எர்த் மூவர்ஸ்,பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹெவி ஏரோ நேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. 

மேலும், இதுபோன்ற கண்காட்சிகளால், கோவை சிறு, குறு தொழில் முனைவோர்களால் எந்த மாதிரியான பொருட்களை தயாரிக்க முடியும் என்ற தெளிவிற்கும் வர முடியும் என கொடிசியா அமைப்பின் தலைவர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.



மேலும் அவர் கூறும் போது :-  கோவையில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்தக்  கண்காட்சியின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதீத வளர்ச்சியை எட்ட இந்தக் கண்காட்சி பெரிதும் உதவும். மேலும், இந்திய அரசாங்கம் சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஒசூர், பெங்களூர் ஆகிய இடங்களை இணைத்து ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் வழித்தடத்தை உருவாக்க இருப்பதால் சிறு குறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களால் ராணுவத்திற்கு வேண்டிய தளவாடங்களை தயாரிப்பது எளிதாகி உள்ளது. 

தற்போது, கோவையில் பெரும்பாலான தொழில்துறையினர் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தேவைக்கேற்ப அதிகப்படியான பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் வாகனங்கள் மின்சாரத்தின் மூலம் இயங்க ஆரம்பிக்கப்படும் போது குறு, சிறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும். ராணுவ தளவாட உற்பத்தியை மேற்கொள்ளும் போது, உற்பத்தி குறைவாக இருப்பினும் அதிக லாபம் உடையதாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் கோவை மிக பெரும் சந்தையாக உருவெடுக்கும். ராணுவ தடவாளங்கள் தயாரிப்பில் திறன் வாய்ந்த ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இரண்டு மூன்று ஆண்டுகளில் அடித்தளம் அமைக்கப்பட்டு, சரி செய்யப்படும். 

ராணுவ தடவாளங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 15 முதல் 30% பொருட்களை தயாரிக்க முன் பணமாக அளிக்கப்படுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொருட்கள் தொடர்பாக தெரிந்து கொள்ள சென்றபோது, ஒரு தொழில் நிறுவனம் ஹெலிகாப்டருக்கு தேவையான ஒரு பொருட்களின் உற்பத்தி விலை மட்டுமே ரூ. 26,000 என்ற வகையில் ஒரு ஆண்டு 100 பொருட்களை தயாரிக்கும் பட்சத்தில் வருடத்திற்கு 26 கோடி வரை ஈட்ட வாய்ப்பு உள்ளது. அதிக அளவு உற்பத்தி மேற்கொள்ள இணைந்து பணியாற்றும் போது அதிகப்படியான லாபத்தை தொழில் துறையினர் தடவாளஙகள் தயாரிப்பில் ஈட்ட முடியும். இவ்வாறு கூறினார். 

மேலும், இந்தக் கண்காட்சியை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைக்க உள்ளதாகவும் கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தொழில் துறை ஆணையர் ராஜேந்திரகுமார்,செயலாளர் ஞானதேசிகன் மற்றும் ராணுவ பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...