உதகையில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்கள்

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலாத் தலங்கள் அதிகளவில் உள்ளது. இம்மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா நகரமான ஊட்டியில் நகரில் சாலையோரங்கள், சுற்றுலாத் தலங்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் போன்ற இடங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகுபடுத்தவும் ஜகரண்டா மரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டன. வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜகரண்டா மரங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலர்கள் பூக்கும். அவ்வாறு மலர்கள் பூக்கும் காலங்களில் மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்துவிடுகின்றன. அப்போது மலர்கள் மட்டும் ஊதா நிறத்தில் பூத்து குலுங்கும். இதனால் மரம் முழுவதும் ஊதா நிறமாக காட்சியளிக்கும். பார்ப்பவர்களை ஈர்க்கும் இந்த பூக்களை பள்ளி குழந்தைகள் பட்டாசு பூ என்று அழைத்து வருகின்றனர்.

அங்கு சுற்றுலா செல்லும் பயணிகள் சாலையோரங்களில் பூத்து குலுங்கும் ஜகரண்டா மலர்களைக் கண்டு ரசித்துச் செல்கின்றனர். தற்போது பல்வேறு இடங்களில் ஜகரண்டா மரங்களில் மலர்கள் அதிகளவு உள்ளதால் உள்ளூர் மக்களும் இதனை கண்டு மகிழ்கின்றனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...