பேரனுக்காக பவுலராக மாறிய கருணாநிதி - வீடியோ

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தேறியுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தேறியுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. 

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சளி தொந்தரவு காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதால் அவருக்கு தொண்டையில் ‘டியூப்’ மாட்டப்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் இன்னும் ஒரு சில மாதங்களில் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ‘டியூப்பை’ அகற்றிவிட மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கருணாநிதியை அவரது மகள் செல்வி, மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தினமும் சென்று கவனித்து வருகின்றனர். கருணாநிதியின் பேரனும், நடிகர் அருள்நிதியின் மகனுமான மகிளனை (2) மு.க. தமிழரசு தினமும் தூக்கிக் கொண்டு கருணாநிதியுடன் விளையாட வைப்பது வழக்கம். இந்த நிலையில், கருணாநிதி தனது கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ பதிவை மு.க. தமிழரசு வெளியிட்டுள்ளார்.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதி பந்துவீச அதை கொள்ளுப்பேரன் கிரிக்கெட் மட்டையால் அடித்து மகிழ்கிறான். அப்போது, மகள் செல்வி கருணாநிதியை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி, நீங்கள் பவுலர், நாங்கள் பீல்டிங்கில் இருக்கிறோம். பந்தை போடுங்கப்பா என்கிறார். உடனே கருணாநிதி பந்து வீசுகிறார். இதை கொள்ளுப்பேரனும் கிரிக்கெட் மட்டையால் பந்தை அடிக்கிறான். ஓடி விழும் பந்தை தமிழரசுவின் மனைவி மோகனா எடுத்து கொடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் கருணாநிதி பந்தை வீசுவது போல் பாவலா செய்வதும், பந்தை வீசாமல் அடுத்த முறை வீசுவதும் சிரிப்பை உருவாக்குகிறது. உடனே செல்வியும் தமிழரசுவின் மனைவி மோகனாவும், எப்படி ஏமாற்றி பந்து வீசுகிறார் என்று சிரிக்கின்றனர். கருணாநிதி பந்து வீசும் போதெல்லாம் ‘சூப்பர்’ என்று செல்வி உற்சாகப்படுத்தி கை தட்டுகிறார். எப்படி பந்து வீசுகிறார் பாருங்கள் என்று மோகனாவும் பேசுகிறார். விளையாடியது போதுமா? என்று கேட்கிறார்கள். அப்போது விளையாடிக் கொண்டிருக்கும் கொள்ளுப் பேரன் தாத்தா பந்து போடுங்க என்று அழைக்கிறான். இந்தக் காட்சிகள் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கருணாநிதி முன்பைவிட உற்சாகமாக இருக்கிறார் என்பதை வெளிக்காட்ட இந்த வீடியோ வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...