சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட பச்சைக்கிளிகளை மீட்ட வனத்துறை

கோவையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய பச்சைக்கிளிகளை வனத்துறையினர் மீட்டனர்.


கோவை: கோவையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய பச்சைக்கிளிகளை வனத்துறையினர் மீட்டனர்.

கோவை மாவட்ட வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டியல் 4-ல் சேர்க்கப்பட்ட 'அலக்சாண்டரின்' வகை பெரிய பச்சைக்கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில், நேற்று முன் தினம் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விற்பனைக்காக இருந்த 10 பெரிய பச்சைக்கிளிகளை மீட்டனர்.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், "இவ்வகை பச்சைக்கிளிகள் கர்நாடக மாநிலத்தில் வாழ்பவை. அழகுக்காக இவற்றை வளர்க்க நினைக்கும் சிலர் இதன் இறகுகள் மற்றும் அலகுகளை வெட்டி விற்பனை செய்கின்றனர். இது சட்ட விரோதமானது." என்றனர்.

மீட்கப்பட்ட பச்சைக்கிளிகள் தற்போது கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பறவைகள் குணமடைந்த பிறகு அவற்றை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்று விட இருப்பதாக தெரிகிறது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...