அரசு மருத்துவமனையில் மீண்டும் உயிர் பெற்றது லிப்ட் இயந்திரம்

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழுதாகி இயங்காமல் இருந்த லிப்ட் இயந்திரம் பழுது பார்க்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

கோவை : கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழுதாகி இயங்காமல் இருந்த லிப்ட் இயந்திரம் பழுது பார்க்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.



"கோவை அரசு மருத்துவமனையில் இயங்காத லிப்ட் : துயரில் தவிக்கும் பொதுமக்கள்" என்ற தலைப்பில் கடந்த மாதம் 10-ம் தேதி நமது சிம்பிளிசிட்டியில் செய்தி தொகுப்பு வெளியானது.பெண்கள் பொது மருத்துவப் பிரிவில் செயல்படாத லிப்டால்,  அந்தப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். அவசர நேரங்களில் படிகளில் நோயாளிகளை தோளிலும் தூக்கிச் செல்லும் நிலையும் இருந்து வந்தது.

நோயாளிகளை படிக்கட்டுகள் வழியாக  ஸ்ட்ரெட்சர்களில் ஏற்றிச் செல்லும் அபாயகரமான சூழலும் இருந்து வந்தது. இந்தப் பரிதாப நிகழ்வினை தக்க ஆதாரங்களுடன்  சிம்பிளிசிட்டி செய்தியாக வெளியிட்டது. 



இந்த நிலையில், பெண்கள் பொது மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள்  ஐ.எம்.சி.யு வார்டுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து, பழுதடைந்த  லிப்டை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்து பழைய ஐ.எம்.சி.யு வார்டில் இருக்கும் இருக்கும் நோயாளிகளை மீண்டும் பெண்கள் பொது மருத்துவப் பிரிவுக்கே மாற்றப்படுவார்கள் என கோவை அரசு மருத்துவமனை இருப்பிட அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவ மனை இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்திரவேல் கூறியதாவது, "பொதுமக்களின் சிரமத்தை தீர்க்க தற்காலிகமாக பொது மருத்துவ பிரிவில் இருக்கும் நோயாளிகளைப் பழைய ஐ.எம்.சி.யு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். லிப்ட் சீரமைக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் முடிவடையும்.  பணிகள் முழுமையாக முடிந்த பின் நோயாளிகள் அனைவரும் மீண்டும் பெண்கள் பொது மருத்துவ பிரிவுக்கு மாற்றப்படுவார்கள்." என்றார்.

மேலும் அம்மருத்துவமனையின் பொதுப்பணிதுறை உதவி மின்பொறியாளர் பாலன் கூறும் போது, "இயந்திரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். லிப்டில் செல்லும் போது சென்சார்கள் முன் சரியாக நிற்கவில்லை என்றால் இயந்திர பாதிப்புகள் ஏற்படுகிறது.லிப்டுக்குள் வெற்றிலை மென்று உமிழ்வதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். நம் பொருட்களை நாம் தான் சரியாகக் கையாள வேண்டும்." என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...