வால்பாறை டவுன் பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம் : பொதுமக்கள் பாதுகாப்பில் அதிகாரிகள் அலட்சியம்

கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை டவுன் பகுதியில் வட்டாட்சியர் மற்றும் மாணவியர் விடுதி, உண்டு உறைவிடப்பள்ளி, தனியார் பள்ளி மற்றும் குடியிருப்பு நிறைந்த பகுதியாகும். இன்று அதிகாலையில் மாணவியர் விடுதி அருகாமையில் சிறுத்தைப்புலி கால்நடையை வேட்டையாடிய போது குடியிருப்பு அருகாமையில் இருந்த கார்களில் ரத்தக்கரை ஏற்பட்டுள்ளதோடு உராய்வும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் சிறுத்தைப்புலியின் கால்தடமும் உள்ளது. கால்நடையை வேட்டையாடி விட்டு, மாணவியர் விடுதி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அடர்ந்த புதர் செடிக்குள் மறைந்துள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



வால்பாறை டவுன் பகுதியில் உள்ள காமராஜர் நகர், கலைஞர் நகர், வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை அகற்ற நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்த போது, இது நகராட்சிக்கு சொந்தமான இடம் இல்லை எனக் கூறி மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். 

தற்போது, வனவிலங்குகளின் கூடாரமாக மாறி வரும் இப்பகுதியில், கடந்த மாதம் வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் கழுதை ஒன்றை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றதும், நடுமலை எஸ்டேட்டில் குடியிருப்புக்கு அருகில் புதர்கள் நிறைந்து காணப்பட்டதால் அதற்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி சைதுல் என்ற சிறுவனை தாக்கி கொன்றதும் குறிப்பிடத்தக்கது. 

எனவே, டவுன் பகுதிக்குள் காணப்படும் புதர்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும், மனித உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாகவே டவுன் பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, நடுமலை எஸ்டேட்டில் 4 வயது சிறுவனை சிறுத்தைப்புலி தாக்கி கொன்றதையடுத்து, வால்பாறை பகுதிகளில் உள்ள அனைத்து எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள புதர்களை 10 தினங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அனைத்து எஸ்டேட் நிர்வாகத்திற்கும், அரசு அதிகாரிகளுக்கும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், 15 நாட்கள் ஆகியும் சார் ஆட்சியரின் உத்தரவை அரசு அதிகாரிகளும் ஒரு சில எஸ்டேட் நிர்வாகங்களும் காற்றில் பறக்க விட்டனர். சார் ஆட்சியரின் உத்தரவை மதிக்காத இந்த அலட்சியப் போக்கிற்கு சார் ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...