கோவையில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் : கோடையில் 130 மி.மீ மழைக்கு வாய்ப்பு

கோவையில் முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது என்றும், கடந்த 2 ஆண்டுகள் சரியாக பெய்யாத கோடை மழை இந்தாண்டு 130 மி.மீ வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவையில் முன்னதாகவே கோடை காலம் தொடங்கியது என்றும், கடந்த 2 ஆண்டுகள் சரியாக பெய்யாத கோடை மழை இந்தாண்டு 130 மி.மீ வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வேளாண்மை பல்கலை கழகத்தின்  வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, "கோவையில் தற்போது 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகி வருகிறது. இனி வரும் மாதங்களில் ஏப்ரலில் 36 முதல் 38.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மே மாதத்தில் இது படிப்படியாக குறையும். இதனால் கோடை வெயிலின் தாக்கம் ஜூன், ஜூலை மாதங்களில் இருக்காது.

கடந்த 2015 -ம் ஆண்டு கோவையில் 140 மி.மீ அளவுக்கு கோடை மழை பெய்துள்ளது தொடர்ந்த், கடந்த 2016, 2017 ஆம் ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. வெறும் 113 மி.மீ மட்டுமே பெய்தது. ஆனால், இந்தாண்டு 130 மி.மீ வரை கோவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு பெய்யும் பட்சத்தில் மேகம் சூழ்ந்து காணப்படும் வெயிலின் தாக்கம் குறையும்.

கோவையில் 10 முதல் 13 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் வேகம் கூடுதலாக வீச வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வரை கோடை வெயிலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது.  அதே நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இதை விட சற்று குறைவாக வெயிலின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. கோடை வெயிலின் தாக்கம் ஜூலை மாதம் வரை நீடிக்கும். அதே போல் கோடை மழையும் 140 மி.மீ வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்கள் கழித்து மழை பெய்யலாம். கோடை காலத்தில் 6 முறை மழை பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...