ஜெ.தீபா பேரவையை அரசியல் அமைப்பாக மாற்ற நடவடிக்கை

தேர்தல்களில் போட்டியிடும் வகையில் ஜெ.தீபா பேரவையை நிலையான அரசியல் அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் ஜே. தீபா தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தேர்தல்களில் போட்டியிடும் வகையில் ஜெ.தீபா பேரவையை நிலையான அரசியல் அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் ஜே. தீபா தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா ஜே தீபா பேரவை சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜே தீபா கலந்து கொண்டார். அப்போது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓர் ஆண்டுகாலமாக பேரவையாக நடத்தி வருகிறோம். தேர்தலில் நிற்க மற்றும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மிக விரைவில் பேரவையை நிலையான அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எடப்பாடி தலைமையிலான ஆட்சி, ஒரு ஆட்சி என சொல்லமுடியாது, இது பெரும்பான்மையற்றது. மத்திய அரசால் இயக்கப்படும் ஆட்சியாகும். என்றார். 

மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நடிகர்கள் பல பேர் முன்னதாகவே அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களின் கட்சியானது முழுமையாக அவர்களால் இயக்கப்பட வேண்டும். மத்திய அரசாலோ, மற்ற கட்சிகளாலோ இயக்கப்படக் கூடாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தின் நீதி விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதில்களே அளிக்கப்பட்டு வருகின்றனர். சசிகலா அணியினரின் தலையீடு அதிகபட்சமாக இருக்கிறது. எனக் கூறினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...